இந்தியா, மார்ச் 27 -- Kambakareswarar: தென்னாட்டில் சிவபெருமான் குடி கொண்டிருக்கும் சிறப்பு மிகுந்த கோயில்களின் திருபுவனம் சிவபெருமான் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கோயிலில் சிவபெருமான் லிங்க வடிவில் கம்பஹரேஸ்வரராக காட்சி கொடுத்து வருகிறார். மூர்த்தி வடிவில் சரபேஸ்வரராக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்த வருகிறார். சிவபெருமான் கோயில்களில் மிகவும் பிரம்மாண்ட கோயிலாக இது திகழ்ந்து வருகின்றது. இந்த கோயிலில் ஏராளமான சிற்ப வேலைபாடுகள் காணப்படும்.

மிகவும் தீவிர சிவபெருமான் பக்தரான அரக்கர் இனத்தைச் சேர்ந்த ஹிரண்யகசிபு மகாவிஷ்ணு மீது கடுமையான பகை கொண்டிருந்தார். நாராயணா என்ற பெயரை யாரேனும் துதி பாடினால் அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படும் என்று கட்டளையிட்டிருந்தார். அவருக்கு மகனாக பிறந்த பிரகலாதன் தந்தை ஹிரண்...