இந்தியா, ஜூன் 2 -- உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்து இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் 'மாமன்னன்'. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (02 -06-2023) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வைத்து மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியதாவது, "

"உயிரே உறவே தமிழே... பல மேடைகளில் படத்தை நாம் வாழ்த்துவோம். ஏன் என்றால் படத்தை நாம் பார்த்திருக்க மாட்டோம். படம் நன்றாக வர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் சொல்லி விட்டுச் செல்வோம்.

இந்தப்படத்தை நான் படம் பார்த்து விட்டேன். இந்தப்படம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பது என்னுடைய ஆசை. என் நட்புக்காக மட்டும் நான் இதைச் சொல்லவில்லை. இதில் இருக்கும் குரல் கேட்கப்பட வேண்டியது. இது மாரியின் குரல் என்று ...