இந்தியா, மார்ச் 3 -- 'குணா' படத்திற்காக கமல்ஹாசன் எப்படி குணா குகையை கண்டுபிடித்தார் என்பதை அந்தப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய ராசி அழகப்பன் வாவ் தமிழா சேனலுக்கு பேசி இருக்கிறார்.

அவர் பேசும் போது, " அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் படங்களுக்கு பிறகு, எல்லோரும் நினைவில் வைத்துக் கொள்வது போல ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று கமல் நினைத்தார்.

எப்போதுமே கவிதாலயா தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு படம் முடிந்த பின்னர், கமலை அனந்து அழைத்து பேசுவது வழக்கம். அந்த வகையில்தான் அப்போதும் அனந்து கமலை அழைத்திருந்தார்.

அவரிடம் அடுத்தப்படம் தொடர்பாக பேசிக்கொண்டிருந்த போது அனந்துதான் கடவுள் மீது ஒரு பக்தன் எவ்வளவு முரட்டுத்தனமான பக்தியோடு இருப்பானோ, அதே போன்று ஒரு கதாபாத்திரம் தன்னுடைய காதலியை பார்த்தால் எப்படி இருக்கும் என்று சொன்னார். கதை நகர...