இந்தியா, பிப்ரவரி 3 -- சீருடை பணியாளர் தேர்வாணைய தலைமை அலுவலகத்தில் ஏடிஜிபி அறையில் கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஏற்பட்ட தீவிபத்து ஏ.சி மின்கசிவு காரணமாக ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த தீவிபத்து தன்னை கொலை செய்வதற்காக நடைபெற்ற சதி என டிஜிபி, உள்துறை செயலாளர், தலைமை செயலாளருக்கு ஏடிஜிபி கல்பனா நாயக் புகார் அளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தப்பக்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்து உள்ளார். அதில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் நடக்கும் குளறுபடிகளை சுட்டிக்காட்டியதற்காக, தன்னை கொலை செய்யும் நோக்கில் தன் அலுவலகம் தாக்கப்பட்டதாக காவல்துறை கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் ஐ.பி.எஸ் அவர்கள் தெரிவித்திருப்பதாக வரும் செய்தி ...