இந்தியா, பிப்ரவரி 1 -- இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் கொலம்பியா விண்கலம் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைகிறது. நாசாவில் உள்ள அனைவரும் அந்த விண்கலத்தையும், அதில் பயணம் செய்த கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேரையும் வரவேற்பதற்காக தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் விண்கலம் தரையிறங்க இன்னும் 16 நிமிடங்களே இருந்தன. மற்ற விஞ்ஞானிகள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். ஆனால், அந்த விண்கலம் திடீரென வெடித்துச் சிதறியது.

அதில் பயணம் செய்த கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேரின் உடலும் சிதறியது. ஆம் இந்தியாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை நம்மைவிட்டு பிரிந்துவிட்டார். அவருக்கு பின் இந்தியாவில் சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தன் வாழ்க்கையை பாடமாக்கிவிட்டு, நம் மனதில் என்றும் நீங்கா இடம்பெற்றுச் சென்றுவிட்டார். ...