இந்தியா, ஏப்ரல் 30 -- கேரளா மற்றும் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளுக்கு கள்ளக்கடல் எச்சரிக்கையை இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் வெளியிட்டு உள்ளது.

எவ்வித அறிகுறிகளும் இல்லாமல் கடல் சீற்றம் அடையும் நிகழ்வை 'கள்ளக்கடல்' என்று கேரளாவில் குறிப்பிடப்படுகிறது.

கேரளா மற்றும் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் உள்ள கடலோர குடியிருப்பாளர்கள் மற்றும் மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையில், "கடல் கொந்தளிப்பு தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளதால் கடலோர பகுதிகளில் உள்ள ஆபத்தான மண்டலங்களில் இருந்து மக்கள் விளங்கி இருக்க வேண்டும் என்று" என்று இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவைகள் மையம் (INCOIS) தெரிவித்து உள்ளதாக் பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் உள்ள மீனவர்களுக்கு வானிலை எச்சரிக்கைகளை INCOIS அமைப்பு வெளியிட்டு வருகிறது. ...