இந்தியா, பிப்ரவரி 22 -- நாம் தமிழர் கட்சியில் இருந்து விலக உள்ளது குறித்து விரைவில் அறிவிக்க உள்ளதாக காளியம்மாள் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் விஜோஜ் என்பவரின் குழந்தையின் முதல் திருவிருந்து விழா அழைப்பிதழ் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் திமுக செய்தித் தொடர்பாக கான்ஸ்ன்டைன் ரவீந்திரன், காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பட் ஆகியோரது பெயர்கள் உடன் காளியம்மாள் பிரகாசம் என்ற பெயரும் இடம்பெற்று உள்ளது.

நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக காளியம்மாள் உள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வந்தார். நடிகர் விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்ற...