இந்தியா, பிப்ரவரி 16 -- ஒருத்தர் அவங்க சொந்தக்காரங்கள பாக்க பைனாகுலர் கொண்டு போனாராம். ஏன்?

ஏன்னா அவங்க எல்லாரும் தூரத்து சொந்தமாம். அதான் பைனாகுலர் கொண்டு போனாராம். ஹாஹாஹா!

ஒருத்தர் தன்னோட வீட்டு செவுத்துல ஆணி அடிச்சு ஜிமிக்கி கம்மல் மாட்டுனாராம். ஏன்?

ஏன்னா, செவுத்துக்கும் காது இருக்குன்னு சொன்னாங்களாம். அதான். ஹாஹாஹா!

ஒருத்தர் சூப்பரா சமைப்பாங்களாம், ஆனா ஒரு காரம் பண்ணினா மட்டும் சாப்பிட முடியாதாம். ஏன்?

ஏன்னா அது நமஸ்காரமாம். ஹாஹாஹா!

ஒருத்தனுக்கு செம்ம பசியாம், ஸ்ரெய்ட்டா போய்ட்டு மழைல நெனஞ்சுட்டானாம். உடனே பசி போய்டுச்சாம், எப்படி?

ஏன்னா அது அட (அடை) மழையாம் ஹாஹாஹா!

ஒருத்தன போலீஸ் புடிச்சு ஜெயில்ல போட்டாங்களாம். அதுக்கு முன்னாடி அவனோட தலையில எண்ணெய் தேய்ச்சாங்களாம். ஏன்?

ஏன்னா, அவன் oil தண்டனை கைதியாம். ஹாஹாஹா!

எல்லா சீலயும...