இந்தியா, பிப்ரவரி 5 -- வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் ஒரு புதுவித அனுபவத்தை நமக்கு இந்த வாழ்க்கை கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த அனுபவங்களை தாண்டி நம்மை உயிர்ப்போடு வைத்திருப்பது நமது மன மகிழ்ச்சியே. நம் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளால் நாம் தினமும் சிரிப்பதற்கு மறந்து விடுகிறோம். மனமகிழ்ச்சி மட்டுமில்லாமல் மனதை அமைதி படுத்தவும் தினம் தோறும் மகிழ்ச்சியுடன் சிரிப்பதே சிறந்த மெடிடேஷன் ஆகும். அதிக ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளையும் மருத்துவர்கள் சிரிக்குமாறு பரிந்துரை செய்கின்றனர். நாமும் நமது வேகமான வாழ்க்கையில் சிரிப்பதற்கு என்று நேரம் ஒதுக்காமல் சென்று கொண்டிருக்கிறோம். ஆனால் தினம் தோறும் சிரிப்பதே நம் மனதை அமைதிப்படுத்தும். உங்களது இன்றைய நாளை மகிழ்ச்சியுடன் சிரிப்பதற்கு நாங்கள் இங்கு சில கடி ஜோக்குகளை கொண்டு வந்துள்ளோம். இந்த கடி ஜோக்குக...