இந்தியா, பிப்ரவரி 12 -- உலகில் பலவிதமான வேறுபாடுகளை கடைந்து மனிதன் ஒரு விஷயத்திற்காக இணைகிறான் என்றால் அது சிரிப்பு தான். மகிழ்ச்சியிலும் அளவு கடந்த நன்மைகள் தன்னை தேடி வரும் பொதும் அவனது முகத்தில் வரும் சிரிப்பிற்கு அத்தனை அர்த்தங்கள் உண்டு. ஒரு மநபரை சிரிக்க வைத்து விட்டால் நமது வாழ்வில் அந்த நாள் முழுவதுமே சிறப்பாக அமையும் என்பது இயல்பான ஒரு விஷயம்தான். நாம் அன்றாடம் பார்க்கும் நண்பர்களிடமும் குடும்பத்தாரிடமும் மனம் விட்டு பேசி சிரித்தால் மட்டுமே நமக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும். ஆனால் இன்று நமக்கு கிடைத்துள்ள அதிவேக வாழ்க்கையில் சிரிப்பதற்கு நேரம் ஒதுக்க வேண்டியதாக உள்ளது. இல்லை என்றால் சிரிப்பதையே மறந்து விட்டு நாம் நமது வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருக்கிறோம் .

இந்த மாதிரியான தருணங்களில் நம் நாமே நம்மை சிரிக்க வைத்துக் கொள்ள வேண்...