இந்தியா, ஜனவரி 27 -- வெயிட் இல்லாத ஹவுஸ் எது?

வேற எது? லைட் ஹவுஸ் ஹாஹாஹா!

உயிர் இல்லாத விலங்கு எது?

வேற எது, கை விலங்கு, ஹாஹாஹா!

முட்டையே போடாத பறவை எது?

வேற எது, ஆண் பறவை தாங்க, ஹாஹாஹா!

டாக்டர் ஊசி போட வரும்போது ஒருத்தன் தடுத்தானாம், ஏன்

ஏன்னா அது தடுப்பு ஊசியாம். ஹாஹாஹா!

கல்யாண வீட்டுல ஒரு ஆள மட்டும் இழுத்து சாம்பார்ல போட்டாங்களாம், ஏன்?

ஏன்னா, அந்த ஊர்லயே அவர்தான் பெரிய பருப்பாம். ஹாஹாஹா!

மாடு போலவே சின்னதாக இருக்கும். ஆனால் அது மாடு இல்லை. அது என்ன?

வேற என்ன? கண்ணுக்குட்டி, ஹாஹாஹா!

ஒருத்தன் எக்ஸாம் ஹாலுக்குப்போயிட்டு திரும்பி வந்துட்டனாம், ஏன்?

ஏன்னா அது ரிட்டர்ன் எக்ஸாமாம். ஹாஹாஹா!

ஒருத்தன் சாப்பிடுவதற்கு முன்னாடி ஃபேனை ஆஃப் பண்ணிட்டு சாப்பிட்டானாம், ஏன்?

ஏன்னா, அவனோட அப்பா வியர்வை சிந்தி சாப்பிடணும்னு சொல்லியிருக்காரா...