இந்தியா, பிப்ரவரி 6 -- சமீப காலமாக இந்தியாவில் உணவுச்சந்தை என்பது மிகப்பெரிய வருவாய் ஈட்டும் ஒரு தொழிலாக மாறி வருகிறது. அதிலும் விதவிதமான உணவுகளை வித்தியாசமாக சமைத்துக் கொடுத்தால் அனைவரும் விரும்பி உண்ணும் பழக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இருப்பினும் நமது பாரம்பரிய உணவுகளுக்கும் இந்திய சந்தையில் மதிப்பு குறையவில்லை. பாரம்பரிய உணவுகளையும் மக்கள் அதிகமாக விரும்பி உண்ணுகின்றனர். அந்த வகையில் காளானை வைத்து பல வழக்கமான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. நமது உடலுக்கு பலவிதமான ஊட்டச்சத்துக்களை வழங்குவது காளான். இந்த காளானில் பல நன்மைகள் உள்ளன. நாம் எப்போதும் காளானில் காளான் பிரை அல்லது காளான் குழம்பு மட்டுமே செய்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் தற்போது பல உணவுகங்களில் கடாய் காளான் எனும் ஒரு புதிய உணவு வகை செய்யப்பட்டு வருகிறது. இது சாப்பிடுவதற்க...