சென்னை,ஈரோடு,கோவை, மார்ச் 16 -- KA Sengottaiyan : பரபரப்பான சூழலில் சாணக்யா இணையதளத்தின் ஆண்டு விழாவில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் கேஏ செங்கோட்டையன், பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். இதோ அவருடைய பேச்சு:

''நான் இப்போது இக்கட்டான சூழலில், இங்கு உரையாற்ற இருக்கிறேன். காலத்தின் சூழ்நிலை, தொலைக்காட்சிகளில் நாள் தோறும் வருகின்ற செய்திகள். ஒரு மாதத்திற்கு முன்னாள் என்னிடம் அனுமதி கேட்டு, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அன்பு கோரிக்கை வைத்தார் பாண்டே. நான் இப்போது இக்கட்டான சூழில் உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன் என்று உங்களால் உணர முடியும். நாம் தமிழர் சீமான் போல என்னால் பேச முடியாது. அவர் ஒரு கட்சியின் தலைவர். அவர் கருத்துகளை அவரால் கூற முடியும். ஆனால், நான் அளந்து போச வேண்டிய இக்காட்டான சூழலில் பேசிக் கொண்டிருக்கிறேன்.

ம...