இந்தியா, பிப்ரவரி 16 -- K.R.Vijaya: தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற நடிகையான கே.ஆர். விஜயா சில மாதங்களுக்கு முன் சிட்டி பாக்ஸ் மீடியா எனும் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில், தன் சினிமா வாழ்க்கை, திருமணம், குழந்தைகள், குடும்பம் பற்றிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அப்போது, "நான் 1963ல சினிமாவுக்கு நடிக்க வந்தேன். இப்போ இத்தனை வருஷம் கடந்துருச்சு. இதெல்லாம் எனக்கு கிடைச்ச பாக்கியமா நான் நினைக்குறேன். உண்மைய சொல்லனும்ன்னா என் நிஜ பேரு தெய்வநாயகி தான். நான் ஒரு ஷூட்டிங்கிற்காக மேக்கப் டெஸ்ட் செய்ய போயிருந்தேன். அப்போ அங்க எம்.ஆர்.ராதா சார் இருந்தாரு.

அவரு என்கிட்ட பேரு என்னென்னு கேட்டாரு. அப்போ தெய்வநாயகின்னு சொன்னதும் இன்னும் என்ன பழைய ஃபேஷன்ல பேர் வச்சிருக்க. இந்த விஜயா மாதிரி எதையாவது வைக்க வேண்டியது...