இந்தியா, பிப்ரவரி 6 -- Jurassic World Rebirth Trailer: சின்ன பட்ஜெட் படமோ, பெரிய பட்ஜெட் படமோ, ஹாலிவுட்டில் சுவாரஸ்யமாக இருக்கும் சில படங்கள் மட்டுமே உள்ளன. ஹாலிவுட் படங்களைப் பற்றி அதிகம் தெரியாத தமிழ் ரசிகர்களைக்கூட கவர்ந்த சயின்ஸ் ஃபிக்சன் படம் தான், ஜுராசிக் பார்க். 1993-ம் ஆண்டு வெளியான இப்படம் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றது. இது பல 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த படமாகவும் சொல்லப்படுவதுண்டு.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன டைனோசர்கள் எப்படி மீண்டும் பூமிக்கு வருகின்றன என்பதை கற்பனை கலந்து இயக்கியிருப்பார், மூத்த ஹாலிவுட் இயக்குநர் ஸ்பீல்பெர்க்.

ஸ்பீல்பெர்க் இயக்கிய ஜுராசிக் பார்க் திரைப்பட்டம் வசூலில் பெரும் சாதனையை ஏற்படுத்தியது. தற்போது ஜுராசிக் பார்க் திரைப்படங்க...