இந்தியா, ஜனவரி 30 -- JSK: சீரியல்களில் ஹீரோவாக நடிச்சிட்டு இருந்தேன் எனவும்; அரசியல் போனேன் எனவும், திரும்பவும் சினிமா வந்திட்டேன் எனவும் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் ஜே.சதீஷ் குமார் பேசியுள்ளார்.

திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் மற்றும் இயக்குநர் எனப் பல அவதாரங்களில் செயல்படுபவர், ஜே.சதீஷ் குமார். நடுவுல் கொஞ்சம் பக்கத்தைக் காணோம், இதற்காகத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பரதேசி உட்பட 30க்கும் மேற்பட்ட படங்களை வாங்கி விநியோகித்தவர், ஜே.சதீஷ் குமார். ராமின் இயக்கத்தில் உருவான தரமணி, வசந்தின் இயக்கத்தில் உருவான அநீதி, மாரி செல்வராஜின் வாழை உட்பட பல படங்களில் நடித்துள்ள ஜே.சதீஷ் குமார், இன்றைக்கு ஃபயர் என்ற திரைப்படம் மூலம் இயக்குநராக திரைத்துறையில் அடியெடுத்து வைத்துள்ளார்.

திரைப்பட விநியோகஸ்தராகவும், தயாரிப்பாளராகவும், நடிகராகவும், இயக்குந...