இந்தியா, பிப்ரவரி 7 -- சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் உள்ளிட்ட பொருட்களை தன்னிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ஜெ.தீபா முறையீடு செய்து உள்ளார். கர்நாடக உயர் நீதிமன்றம் தீபாவின் கோரிக்கையை நிராகரித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக 1996ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. அப்போது அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 11,344 புடவைகள், 750 காலணிகள், 91 கை கடிகாரங்கள், 28 கிலோ மதிப்பிலான தங்கம், வைர நகைகள், 700 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு, கர்நாடக சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதால் , பறிமுதல் செய்ய...