இந்தியா, ஜனவரி 29 -- Jayalalithaa's Assets: சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ நகைகள், 1562 ஏக்கர் நிலப்பத்திரம் ஆகியவற்றை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க கர்நாடக அரசுக்கு பெங்களூரு நகர நீதிமன்றம் இன்று (ஜனவரி 29) உத்தரவு பிறப்பித்துள்ளது.

தங்க, வைர, வெள்ளி நகைகள் மற்றும் நிலப்பத்திரங்களை வரும் பிப்ரவரி 14, 15 ஆகிய தேதிகளில் ஒப்படைக்க வேண்டும் எனவும் அன்றைய தினம் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், பெட்டிகளுடன் வர வேண்டும் எனவும் அவற்றை கொண்டு செல்ல உரிய வாகன, பாதுகாப்பு வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருட்கள் எடுத்துச் செல்லும் போது அதனை மதிப்பீடு செய்ய மதிப்பீட்டாளர்கள் இருக்க வேண்டும், ஒட்டுமொத்த நடைமுறையும் வீடியோ பதிவு செ...