இந்தியா, பிப்ரவரி 19 -- ராம்சரணின் அடுத்த படத்தில் ஜான்வி கபூர் ஜோடி சேர்ந்து நாயகியாக நடிக்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்து ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்படி திரைப்படத் தயாரிப்பாளர் போனி கபூர், தனது சமீபத்திய நேர்காணலில் தனது மகள் ஜான்வி கபூர், ராம் சரணுடனுடன் இரண்டாவது தெலுங்கு படத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்தினார்.

உப்பேனா இயக்குநர் புஜ்ஜி பாபு தனது அடுத்த படத்தில், தான் நடிகர் ராம் சரணை விரைவில் இயக்கவுள்ளதாகத் தெரிவித்த நிலையில் ஜான்வி கபூர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஜான்வி தற்போது கொரட்டலா சிவாவின் தேவரா படத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து நடித்து வருகிறார். அப்படம் குறித்தும் அவரது வரவிருக்கும் தெலுங்கு படங்கள் குறித்தும் பேசிய போனி கபூர், "எனது மகள் ஏற்கனவே ஜூனியர் என்.டி.ஆருடன் ஒரு...