இந்தியா, ஏப்ரல் 1 -- Jana Nayagan Movie Update: தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட சில படங்களே இயக்கி இருப்பினும், அதில் தன் கதை மற்றும் இயக்கத்தால் வெற்றி கண்டவர் இயக்குநர் ஹெச். வினோத். தன்னுடைய முதல் படத்திலேயே தமிழ் சினிமா மொத்தத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநரான ஹெச். வினோத் தற்போது நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜன நாயகனில் மொத்த கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கவனம் ஈர்த்த நிலையில், இந்தத்திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ( ஜனவரி 9, 2026) வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றி இருப்பதாகவும், இதற்காக அந்த நிறுவனம் ஜனநாயகன் படக்குழுவிற்கு 121 கோடி வரை கொடுத்திருப்பதாகவும் ஓடிடி ப்ளே செய்தி நிறுவனம் செய்...