இந்தியா, பிப்ரவரி 17 -- தமிழ்நாட்டில் செய்யப்படும் உணவுகள் என்றால் உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.ஏனெனில் இங்கு தான் வெவ்வேறான ஊர்களில் வெவ்வேறான சமையல் முறை உள்ளது. இதுவே நம் ஊர் சமையலின் தனிச்சிறப்பு ஆகும். மேலும் தமிழர்களின் உணவு கடல் தாண்டியும் சென்றுள்ளது எனக் கூறலாம். அதற்கு சிறந்த உதாரணம் இலங்கையில் வாழும் தமிழர்களின் உணவுதான். இலங்கையில் செய்யப்படும் உணவுகளில் பல தமிழ்நாட்டில் செய்யப்படும் உணவுகளோடு ஒத்து இருக்கும். அதிலும் தமிழர்களின் பிரிய உணவான அசைவ உணவுகளுக்கு அங்கு தனி சிறப்பு உண்டு. இலங்கை தமிழர்களிடையே பிரபலமான உணவுகளில் ஒன்றை தான் இங்கு பார்க்க உள்ளோம். அது தான் யாழ்ப்பாண மட்டன் வறுவல். இதனை கம கமக்கும் சுவையில் எப்படி செய்வது என்பதை இங்கு பார்க்கலாம்.

20 முதல் 25 சின்ன வெங்காயம்

2 தக்காளி

2 பச்சை மிளகாய்

1 கொத்து கறிவேப...