இந்தியா, ஜனவரி 30 -- இந்தியாவில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலும், செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலும் பலாபழம் சீசன் இருக்கிறது. சில சமயங்களில் ஜனவரி வரை இந்த பழங்கள் கிடைக்கும். இது போன்ற சமயங்களில் அந்த பழங்களை சாப்பிடுவது நல்லது. மருத்துவர்களும் அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை சாப்பிடுமாறு பரிந்துரை செய்கின்றனர். தமிழின் முக்கனிகளில் ஒன்றான பலாவின் சுவை தித்திப்பாக இருக்கும். நாம் சாப்பிடும் இந்த பலாவின் கொட்டைகளை தூக்கி ஏறிய வேண்டாம். இதனை வெறுமன அவித்து சாப்பிட்டாலே மிகவும் ருசியாக இருக்கும். இப்போது இந்த பலா கொட்டையை வைத்து சுவையான குழம்பு செய்வது எப்படி என்பதை இங்கு தெரிந்துக் கொள்ளலாம்.

20 முதல் 25 பலாக்கொட்டை

2 தக்காளி

2 பெரிய வெங்காயம்

ஒரு டீஸ்பூன் மல்லித் தூள்

4 பச்சை மிளகாய்

ஒரு டீஸ்பூன் சோம்பு

ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள் ...