இந்தியா, ஜனவரி 31 -- காடுகளில் வாழும் விலங்குகளில் தோற்றத்தில் தனித்துவமாகவும், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும் விலங்குகளில் ஒன்றாகவும் இருந்து வருகிறது வரிக்குதிரை. புற்கள், தாவரங்கள், பாசி போன்ற பிற பல்லுயிர் உயிரினங்களை உண்ணும் மேய்ச்சல் உயிரனமாக இருந்து வரும் வரிக்குதிரை பெயருக்கு ஏற்றார் போல் கருப்பு மற்றும் வெள்ளை நிற வரிகளை உடல் முழுவதிலும் கொண்ட விலங்கினமாக உள்ளது. சிங்களால் வேட்டையாடக்கூடிய விலங்காக இருந்து வரும் வரிக்குதிரைகள் தங்களை தற்காத்து கொள்ள ஓடுவது அல்லது எட்டி உதைப்பது போன்றவற்றை செய்வதாக கூறப்படுகிறது.

உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வரிக்குதிரை இனத்தைப் பாதுகாப்பதில், தனிநபர்கள் முக்கிய பங்கு பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் விதமாக சர்வதேச வரிக்குதிரை நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆப்பிர்காக கண்டத்தில் அதி...