இந்தியா, செப்டம்பர் 25 -- இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் விளையாடியது. இதில் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தபோதிலும், அடுத்ததாக நடைபெற்ற ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து மகளிர் அணியை ஒய்ட் வாஷ் செய்தது.

முதல் போட்டியில் ஸ்மிருத்தி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கெளர், யஷ்திகா பாட்யா ஆகியோரின் சிறப்பான பேட்டிங் மூலம் 227 ரன்களை எளிதாக சேஸ் செய்தது. இதன் பின்னர் ஹர்மன்ப்ரீத் அதிரடியான 143 ரன்களின் மூலம் 333 ரன்கள் குவித்த இந்தியா, 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் இரண்டு போட்டிகளில் வென்று ஒரு நாள் தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர் அணியினர், மூன்றாவது மற்றும் இந்திய சீனியர் வேகப்பந்து வீச்சாளரான ஜூலன் கோஸ்வாமியின் கடைசி போட்டியில் சிறப்பான வெற்ற...