இந்தியா, மார்ச் 7 -- பண்டிகை கால கூட்ட நெரிசல்கள் மற்றும் மகா கும்பமேளா போன்ற முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையில், நாடு முழுவதும் 60 நிலையங்களில் புதிய கூட்டக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது

கூட்ட நெரிசலை நிர்வகிக்க, இந்த நிலையங்களுக்கு வெளியே நிரந்தர காத்திருப்பு பகுதிகள் உருவாக்கப்படும், பயணிகள் தங்கள் ரயில் வரும்போது மட்டுமே நடைமேடைகளில் ஏற அனுமதிக்கப்படும்.

புது டெல்லி, ஆனந்த் விஹார், வாரணாசி, அயோத்தி மற்றும் பாட்னா நிலையங்களில் ஏற்கனவே இதற்கான பைலட் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

ரயில்வே இந்த நிலையங்களில் முழுமையான அணுகல் கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தும். அதன்படி உறுதிப்படுத்தப்பட்ட ...