இந்தியா, பிப்ரவரி 1 -- இந்தியக் கடலோரக் காவல்படை (ICG) தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1 ஆம் தேதி அன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அந்த படையின் முக்கியத்துவம் மற்றும் வரலாறு குறித்து அறிந்துகொள்வோம்.

இந்திய கடல் எல்லைகளை பாதுகாப்பதில் கடலோர காவல் படையினரின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சுருக்கமாக ஐசிஜி (ICG) எனப்படும் இந்திய கடலோர காவல் படையானது, இந்திய கடல் எல்லைகளில் ஆண்டு முழுவதிலும் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் ஒரு அமைப்பாகும்.

நமது தேசத்தின் கடல் எல்லைகளில் ரோந்து பணிகளை மேற்கொள்வது, போதைப் பொருள் கடத்தல்களை தடுப்பது, கடற்கரை சூழலியலை காப்பது, வேட்டையாடுபவர்களை பிடிப்பது மற்றும் மீனவர்களுக்கு உதவுவது போன்ற பணிகளை இந்த கடலோர காவல்படை மேற்கொண்டு வருகிறது.

இந்திய கடற்படையுடன், இந்திய கடலோரக் காவல் படை...