இந்தியா, பிப்ரவரி 28 -- பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமான இந்தியன் 2 படத்தின் ஷுட்டிங் இன்னும் கடைசி சில நாள்கள் மட்டுமே பாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வட சென்னை பகுதியில் சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டியிருக்கும் நிலையில், அத்துடன் படப்பிடிப்பு நிறைவு பெறும் என கூறப்படுகிறது.

இந்தியன் 2 படத்தை ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், கோடை விடுமுறையை முன்னிட்டு மே மாதம் 24ஆம் தேதி வெளியடவும் படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே இந்தியன் 3 படத்தை உருவாக்குவது தொடர்பாகவும் வதந்திகள் வெளியான வண்ணம் இருக்கின்றன.

இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுத் ...