இந்தியா, பிப்ரவரி 6 -- இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து டி20 மற்றும் ஒரு நாள் என வெள்ளை பந்து கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரில் இந்தியா 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி நாக்பூரில் இன்று (பிப்ரவரி 6) நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடவில்லை. அத்துடன் இளம் வீரர்கள் யஷஸ்வி ஜெயஸ்வால், ஹர்ஷித் ராணா ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கியுள்ளார்கள்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஷ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து 47.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ...