இந்தியா, மார்ச் 29 -- மத்தியப்பிரதேசத்தில் தள்ளுவண்டியில் முட்டை விற்பனை செய்யும் கடைக்காரர் ஒருவருக்கு ரூ.50 கோடிக்கு வருமான வரி நோட்டீஸ் அனுப்பட்டதால் அவரும் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள். மார்ச் 20 அன்று வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸில், மொத்தம் ரூ.49,24,57,217 வர்த்தக நடவடிக்கைகளின் விரிவான விவரங்களை வழங்கக் கோரியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் பத்தாரியா நகரில் சிறிய அளவில் முட்டை விற்பனை செய்து வருபவர் பிரின்ஸ் சுமன். கை வண்டியில் முட்டை விற்பனை செய்து வரும் பிரின்ஸ் சுமன், வருமான வரித்துறை அவரிடம் சுமார் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள நிதி நடவடிக்கைகள் குறித்து விசாரணை நோட்டீஸ் அனுப்பியதில் அதிர்ச்சியடைந்துள்ளார் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

வருமான வரித்துறை நோட்டீஸை பார்த்து அவரத...