இந்தியா, ஜனவரி 28 -- தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வருபவர் நடிகர் இமான் அண்ணாச்சி. சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கும் இவர், டிவி ஷோக்களிலும் தொகுப்பாளராக இருந்துள்ளார். திருநெல்வேலி ஸ்லாங்கில் காமெடி பக்காவாக பேசி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் இமான் அண்ணாச்சி விபத்தில் சிக்கி உயிர் தப்பியுள்ளார்.

நடிகர் இமான் அண்ணாச்சி தனது குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு காரில் சென்றுள்ளார். இதையடுத்து இவர் பயணித்த கார் மதுரை அருகே புறவழிச்சாலையில் சென்றபோது, சாலையில் சுற்றி திரிந்த மாடுகள் குறுக்க வந்துள்ளது. அப்போது கார் சில மாடுகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதுடன், பலத்த சேதமும் அடைந்துள்ளது.

இந்த விபத்தில் காரின் உள்ளே இருந்த இமான் அண்ணாச்சி மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியு...