இந்தியா, பிப்ரவரி 15 -- நடிகை இலியானா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்திருக்கிறார்.

தமிழில் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடித்த 'நண்பன்' திரைப்படம் மூலம் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர், நடிகை இலியானா.

இவர் தற்போது மைக்கேல் டோலன் என்னும் நபருடன் திருமணம் செய்துகொண்டு, குடும்ப வாழ்க்கையை அனுபவித்து வருகிறார். இத்தம்பதியினருக்கு கடந்த 2023-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இதன்மூலம் இலியானா மற்றும் அவரது வாழ்க்கை துணைவர் மைக்கேல் டோலன் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தங்கள் குழந்தைக்கு பெற்றோர் ஆனார்கள்.

நடிகை இலியானா தனது மகனின் புகைப்படங்களை அவ்வப்போது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அவர் தாய்மையை எவ்வளவு ரசிக்கிறார் என்பதை விளக்கும் சில கருத்துகளையும் பதிவு செய்வார். இந்நிலையில் நடிகை இலியானா மீண்டும் ...