இந்தியா, பிப்ரவரி 2 -- ilayaraja: பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மேற்கத்திய இசைக்கலைஞர்களுடனும் வேலை பார்த்திருக்கிறார். மேற்கத்திய இசைக்கலைஞர்களுடனும் வேலை பார்த்திருக்கிறார். சில இசை கோப்புகளுக்கு அவர் அயல் நாட்டிற்குச் சென்று, அங்குள்ள குழுவோடு பணியாற்றி இருக்கிறார். அதற்கான காரணம் என்ன? இரண்டிற்குமான வித்தியாசம் என்ன உள்ளிட்டவை குறித்து அவரிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்கள் இங்கே!

இது குறித்து சினிமா விகடன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், 'உண்மையில் நம்மூர் ஆட்களையும் அங்குள்ள ஆட்களையும் பிரித்துப் பார்த்ததன் விளைவுதான், நான் அயல் நாட்டிற்கு சென்று வேலை பார்த்தது. நான் அந்த இசைக்கோப்புகளை நம்மூர் ஆட்களை வைத்து எடுக்க வில்லை.

காரணம், அயல் நாட்டின் தரம் இங்கே இருந்தது என்றால், நான் ஏன் அங்கே சென்று இசையை பத...