இந்தியா, ஜனவரி 31 -- Ilayaraja: என் இனிய பொன் நிலாவே பாடலுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது என டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே, இளையராஜாவின் பாடல்களை அவரது அனுமதியின்றி பயன்படுத்தினால் காப்புரிமை பிரச்னை வருகிறது.

2017ஆம் ஆண்டில் தனது உலக சுற்றுப்பயணத்தில் அனுமதியின்றி, தனது இசையில் வந்த பாடல்களைப் பாடியதற்காக, தனது நெடுநாள் நண்பரும் பாடகருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மீது வழக்குத் தொடர்ந்தபோது, பலரால் கவனிக்கப்பட்டார், இளையராஜா.

அதன்பின், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு; லோகேஷ் கனகராஜ் இயக்கி ரஜினிகாந்த் நடிக்கும் ''கூலி'' திரைப்படத்தின் அறிவிப்பு டீஸரில் தனது பாடல் அறிவிப்பு டீஸரில் பயன்படுத்தப்பட்டதாக இளையராஜா புகார் கூறினார்.

மேலும், 1983ஆம் ஆண்டு ''தங்க மகன்'' திரைப்படத்தில் இருந்து ''வா வா பக்க...