இந்தியா, பிப்ரவரி 1 -- Ilaiyaraaja: இசைஞானி இளையராஜா தன் இசையாலும், குரலாலும் இந்திய மக்களை கட்டிப் போட்டுள்ளார். இவர் 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்து, பல்வேறு விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் தற்போது மார்ச் 8ம் தேதி சிம்பொனி இசைப் பயணம் குறித்த முன்னோட்ட வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அன்னக்கிளி படத்தின் மூலம் தொடங்கிய இவரது திரைத்துறை பயணம் தற்போது 50வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையில், இசைஞானி இளையராஜா தனது இசைப் பயணம் குறித்து சன் நியூஸ் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில், " பட்டிக்காட்டில் பிறந்தவன் நான். அங்கிருந்து இசையை கத்துக்க நினைக்குறதே பெரிய விஷயம். எங்க அண்ணன் பாடுறத கேட்டு கேட்டு வந்த ரசனை தான் இது எல்லாம். பாகவதர் பாட்ட கேட்டுட்டு அண்ணோட கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாட்டு பாடிட்டே இ...