இந்தியா, மார்ச் 18 -- பிரபல இசையமைப்பாளரான இளையராஜா பிரதமர் மோடியை சந்தித்து பேசி இருக்கிறார். இந்த சந்திப்புக் குறித்து பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தளத்தில், 'நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் இளையராஜா அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இசைஞானியான அவரது மேதைமை நமது இசை மற்றும் கலாச்சாரத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லா வகையிலும் முன்னோடியாக இருக்கும் அவர், சில நாட்களுக்கு முன் லண்டனில் தனது முதலாவது மேற்கத்திய செவ்வியல் சிம்பொனியான வேலியண்ட்டை வழங்கியதன் மூலம் மீண்டும் வரலாறு படைத்துள்ளார்.

மேலும் படிக்க | 'இளையராஜா முதல் டாக்டர் ராஜசேகர் வரை': தேனி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட திரை ஆளுமைகள்!

இந்த நிகழ்ச்சி, உலகப் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த முக்கியமான சாதனை, அவரத...