இந்தியா, மார்ச் 31 -- Ilaiyaraaja: இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் தனது முதல் சிம்பொனி நிகழ்ச்சியை நடத்தி சாதனை படைத்தார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் தெரிவித்தனர். இவர், நிகழ்ச்சி முடிந்து சென்னை வந்து செய்தியாளர்களை சந்தித்த போது, தனது சிம்பொனி நிகழ்ச்சியை யாரும் டவுன்லோடு செய்து பார்க்க வேண்டாம் எனக் கூறியிருந்த நிலையில், தான் அப்படி கூறியதற்கான காரணத்தை நியூஸ் 18 தமிழ்நாடு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அந்தப் பேட்டியில், "நான் வாசிச்ச சிம்பொனிய டவுன்லோடு பண்ணாம நேரடியா கேளுக்க என சொன்னேந். இப்போ நீங்க இங்க பேசுறத நான் நேரடியா கேக்குறதுக்கும் ரெக்கார்டு பண்ணி கேக்குறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. ஒரே நேரத்துல 80 மியூசிக் இன்ஸ்ட்ருமெண்ட் வாசிக்கும் போது கொடுக்குற அந்த அனுபவம் உங்களை உயர்ந்த மனநிலைக்...