இந்தியா, பிப்ரவரி 13 -- மறைந்த பாடகியும், இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரிணி மறைந்து ஓராண்டு ஆகி இருக்கும் நிலையில், அவரது நினைவு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. பவதாரிணியின் பிறந்தநாளான பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற்ற இந்த கூட்டத்தில் இசைஞானி இளையராஜா, அவரது சகோதரரும் இயக்குநர், இசையமைப்பாளருமான கங்கை அமரன், இயக்குநர் வெங்கட் பிரபு, பவதாரிணி சகோதரர்களும் இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் பவதாரிணி பற்றி உருக்கமான நினைவுகலை பகிர்ந்து கொண்டனர். பவதாரிணி தந்தையும், இசையமைப்பாளருமான இளையராஜா மகள் பவதாரிணி பெயரில் ஆர்கெஸ்ட்ரா குழுவை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் இளையராஜா பேசியதாவது, "பவதாவின் ஒரு ஆண்டு நினைவு நாள் இன்று. இதில் ஆச்சரியம் என்னவென்றால...