இந்தியா, மார்ச் 30 -- Ilaiyaraaja: இசைஞானி இளையராஜா, தனது முதல் சிம்பொனி நிகழ்ச்சியை லண்டனில் இருந்து முடித்து வந்த பிறகு நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி சேனலுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் பல முக்கிய விஷயங்கள் பற்றி பேசி இருக்கிறார்.

திரைத்துறையில வந்து 50 வருஷம் ஆகிட்டாலும் நான் ஒவ்வொரு ஸ்வரத்துலயும் ஒவ்வொரு ராகத்துலயும் ரசிச்சு ரசிச்சு இசையமைப்பேன். நான் இசையமைக்குற பாட்டு முதல்ல எனக்கு பிடிக்கனும். அப்போ தான் அது மத்தவங்களுக்கு பிடிக்கும். இப்படி ஒவ்வொன்னையும் ரசிச்சு ரசிச்சு செய்யுறதால தான் உங்களுக்கு என்னோட பாட்டில் இருக்க இசை எல்லாம் வித்தியாசமா தெரியுது.

நான் இசையமைச்ச நிறைய பாட்டு எனக்கே பாடம் சொல்லி கொடுத்திருக்கு. இப்போ டைரக்டர் கேட்டாரு, புரொடியூசர் கேட்டாருங்குறத்துக்காக மட்டுமே இசையமைச்சா அது வேலை செய்யாது...