இந்தியா, பிப்ரவரி 1 -- Ilaiayaraaja: இசையமைப்பாளர் இளையராஜா தான் சினிமாவிற்கு வந்த கதையும், தன்னை மெருகேற்றி வளர்த்துக் கொண்டது எப்படி என்றும் சன் நியூஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்திருப்பார். அந்தப் பேட்டியில், ஹாலிவுட்ல இப்போ ட்யூன் கம்போஸ் பண்ண ஆளே இல்லன்னு சொல்லும் போது தான் நான் புக் எழுதிட்டு இருக்கேன் என தன் வளர்ச்சி பற்றி பேசி இருப்பார்.

அந்தப் பேட்டியில், "நான் சமீபத்துல ஒரு வீடியோ பாத்தேன். ஒரு இசை நிகழ்ச்சி நடக்க போகுது. அதுல ஹாலிவுட் சம்பந்தப்பட்டவர் பேசுறாங்க. ஹாலிவுட்ல இது ரொம்ப இருண்ட காலம். ஹாலிவுட்ல இசையை எழுதவும் கம்போஸ் செய்யவும் யாரும் இல்லைன்னு சொல்றாரு. இந்த காலத்துல இல்லன்னு சொல்றாரு. அந்த நேரத்துல தான் நான் என்னோட நோட்ஸ் எழுதிட்டு இருக்கேன்.

இதுக்காக என்ன உலகம் திரும்பி பாக்குதோ இல்ல பொருட்படுத்தாம போகுதோ அது...