இந்தியா, மார்ச் 22 -- Idly Kadai Movie Release Update: நடிகர் தனுஷ், ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கியதற்கு பின், இட்லி கடை படப்பிடிப்பில் தனது முழு கவனத்தையும் செலுத்தியிருந்தார். இந்தப் படத்தின் சின்ன சின்ன அப்டேட்களையும் ரசிகர்களுக்கு வெளிப்படுத்தி வந்தார். இந்நிலையில், இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க: அஜித்தால் தள்ளிப் போகிறதா இட்லி கடை ரிலீஸ்.. பரபரப்பாகும் சோசியல் மீடியா

ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தனுஷின் இட்லி கடை படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், இது வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில், விகடன் பத்...