இந்தியா, ஏப்ரல் 4 -- Idly Kadai Movie Release: நடிகர் தனுஷ், ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கியதற்கு பின், இட்லி கடை படப்பிடிப்பில் தனது முழு கவனத்தையும் செலுத்தியிருந்தார். இந்தப் படத்தின் சின்ன சின்ன அப்டேட்களையும் ரசிகர்களுக்கு வெளிப்படுத்தி வந்தார். இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போன நிலையில் இப்போது படத்தின் ரிலீஸ் தேதியை தனுஷ் அவரது எக்ஸ் தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க: அஜித்தால் தள்ளிப் போகிறதா இட்லி கடை ரிலீஸ்.. பரபரப்பாகும் சோசியல் மீடியா

நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படம் இம்மாதம் 10 ஆம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. பின், அதே நாளில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்ட சமயத்தில் இருந்தே இட்லி கடை ரிலீஸ் தள்ளிப்போகும்...