இந்தியா, ஜனவரி 31 -- தமிழ்நாட்டில் 31 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

ஈரோடு கூடுதல் ஆட்சியர் ஆர்.சதீஷ் தருமபுரி மாவட்ட ஆட்சியராக நியமனம்.

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் வாரியத்தின் செயல் இயக்குநர் எஸ்.சரவணன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக நியமனம்.

மதுரை மாநகராட்சி ஆணையர் சி.தினேஷ் குமார் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக நியமனம்.

நகராட்சி நிர்வாக துறையின் இணை ஆணையர் எஸ்.சேக் அப்துல் ரஹ்மான் விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக நியமனம்.

நெல்லை, திண்டுக்கல், தருமபுரி உள்பட 9 மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Published by HT Digital Content Services with permission from HT Tamil....