இந்தியா, பிப்ரவரி 1 -- திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் தனது சமூக வலைதளப்பக்கங்களில் சித்த மருத்துவக்குறிப்புக்களை வழங்கி வருகிறார். இந்த எளிய சித்த மருத்துவக் குறிப்புகள் மூலம் அவர் சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

அதில் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் சுரக்கும் அதிக வியர்வை அதாவது ஹைப்பர்ஹிட்ரோசிஸ் என்பது குறித்து விளக்கியுள்ளார்.

அதுகுறித்து அவர் கூறியதாவது

ஹைப்பர்ஹிட்ரோசிஸ் என்பது அதிக வியர்வை சுரக்கும் ஒரு வியாதியாகும். உடல் வெப்பநிலையை முறைப்படுத்த தேவையான அளவை விட அதிகளவு வியர்வை சுரக்கும். இதனால் கையில் வைத்திருக்கும் கர்சீப்பே நனைந்துபோகும் அளவுக்கு இருக்கும்.

* சூடு அல்லது உடற்பயிற்சியால் அதிக வியர்வை சுரக்காது.

* வியர்வை உடலில் உள்ள ஆடையை நனைத்துவிடும் அளவுக்கு இருக்கும்.

* ஓய்வாக...