இந்தியா, மார்ச் 23 -- HTTAMIL EXCLUSIVE: தெலுங்கு சினிமாவின் மிக முக்கியமான இயக்குநராக பார்க்கப்படுபவர் சேகர் கம்முலா. கதையையும், கதை மாந்தர்களையும் மட்டுமே நம்பி படமெடுக்கும் இந்த படைப்பாளியின் 'ஆனந்த்' 'ஃபிடா' 'லீடர்' 'கோதாவரி' 'ஹாப்பி டேஸ்' 'லவ் ஸ்டோரி' உள்ளிட்ட படங்கள் மிகவும் பிரபலமானவை.

காதல், சாதி, அரசியல் என அனைத்தையும் கையில் எடுத்து எழுதும் இவரின் கதாபாத்திரங்கள் தெலுங்கு சினிமாவுக்கான முகத்தை மாற்றியதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தற்போது தனுஷ் - நாகர்ஜூனா நடிப்பில் உருவாகி வரும் குபேரா பட வேலைகளில் பிசியாக இருக்கிறார். ஹைதராபாத்தில் நடந்த ரெட் லாரி திரைப்பட விழாவில் அவர் சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. அந்த உரையாடலில் இருந்து.

அதுக்கு காரணம் நான் என் கதை மேல வச்சிருக்குற நம்பிக்கை. 'ஆனந்த்' படம் எடுக்கும் போது, இந்தக்கத...