இந்தியா, ஏப்ரல் 14 -- மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை வைத்திருக்கக்கூடிய சிவபெருமான் இந்தியா முழுவதும் கோயில் கொண்டு வாழ்ந்து வருகிறார். குறிப்பாக தமிழ்நாட்டின் மன்னர்களால் போற்றப்பட்டு மிகப் பழமையான கோயில்களில் சிவபெருமான் வாழ்ந்து வருகிறார்.

பல்வேறு விதமான சிறப்பு மிகுந்த கோயில்கள் இன்று வரை காலத்தால் அழிக்க முடியாத அளவிற்கு இருந்து வருகிறது. அப்படிப்பட்ட திருக்கோவில்களில் ஒன்றுதான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில்.

இந்த கோயிலில் மூலவராக சிவபெருமான் முயற்சி இருக்கிறார். மூலவர் அமர்ந்திருக்கும் பிரகாரத்திற்கு மேற்கு பகுதியிலும் வடக்கு பகுதியிலும் இருக்கக்கூடிய புற்றில் இருந்து நாகங்கள் சிவபெருமானை தரிசித்து விட்டு செல்வதை கண்டுள்ளதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

நாகங்கள் இந்த தளத்தில் வழிபட்டு இருப்பதாகவும் மேலும்...