இந்தியா, ஏப்ரல் 3 -- தலை எழுத்து மாற தரிசிக்க வேண்டிய கோயில். இத்தலம் புராண காலத்திற்கும் முந்தையது. அகத்தியர் போன்ற முனிவர்களும், தசரதன், விசுவாமித்திரன், இராமபிரான், வசிஷ்டர் போன்ற இதிகாசகாலத்து பெருமக்களும், முசுகுந்தச் சக்ககவர்த்தி போன்ற புராண காலத்து மன்னர்களும், பின்னர் வாழ்ந்த சேர சோழ பாண்டிய மன்னர்களாலும் வழிபடப்பெற்றது. சைவத் திருமறைகள் நான்கும் இத்தலத்தை மறைக்காடு, மறைவனம், வேதவனம் எனறு போற்றி. புகழ்கின்றன. தேவாரத்தின் ஏழு திருமுறைகளிலும் பதிகம் பெற்ற சிறப்பான தலம் இது.

வேதங்கள் நான்கும் மனித உருக்கொண்டு இத்தலத்தை இத்தலத்திற்கு அண்மையில் உள்ள நாலுவேதபதி என்கிற ஊரில் தங்கி அருகாமையில் உள்ள புஷ்பவனம் என்கிற ஊரில் மலரெடுத்து வந்து திருக்கோயிலின் வடக்குபுறம் நகரத்தை ஒட்டி அமைந்துள்ள வேதாமிருத ஏரியில் நீராடி இத்திருக்கோயில் அமைந்து...