இந்தியா, பிப்ரவரி 17 -- Delhi Earthquake: டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் திங்கள்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், மக்கள் தூக்கத்தில் இருந்து விழுத்து பதற்றத்துடன் வெளியே வந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவானது. இருப்பினும், இதுபோன்ற ஒரு வலுவான அதிர்ச்சியை தாங்கள் ஒருபோதும் உணர்ந்ததில்லை என்று பலர் கூறினர். ரிக்டர் அளவு குறைவாக இருந்தபோதிலும் நிலநடுக்கம் வலுவாக உணரப்பட்டது ஏன்? என பார்ப்போம்.

திங்கட்கிழமை அதிகாலை 5:36 மணியளவில் தலைநகரில் ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

இந்தியாவின் 11 வது ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகரும், கலாம் மையம் மற்றும் ஹோமி ஆய்வகத்தின் நிறுவனருமான ஸ்ரீஜன் பால் சிங், எக்ஸ் இல் இந்த நிகழ்வை விளக்கினார்.

நிலநடுக்கம் டெல...