இந்தியா, ஜனவரி 28 -- HT Tamil Exclusive : ஒவ்வொரு மனிதனும் தலைவலி என்ற பிரச்சினையை சந்திக்காமல் இருக்க முடியாது. அதிலும் தீராத தலைவலி, நாள்பட்ட தலைவலி, திடீர் திடீரென தலைவலி, குனிந்தாலே தலைவலி என்று விதவிதமான தலைவலி என்று ஆளாளுக்கு ஒரு மாதிரி சொல்வார்கள். ஆனால் "மைக்ரேன்"என்று சொல்லக்கூடிய ஒற்றை தலைவலி என்பது எல்லோருக்கும் அச்சம் தரும் சொல்லாக உள்ளது. ஆம்.. ஒற்றை தலைவலி குறித்து மதுரையைச் சேர்ந்த பிரபல ஹோமியோபதி மருத்துவர் ம.ஜானகி அவர்கள் இன்று நம்மிடையே பல தகவல்களை பகிர்ந்து உள்ளார்.

தலைவலி என்பதற்கு மக்கள் பல விசித்திரமான காரணங்கள் சொல்வதைப் பார்க்கிறோம். ஆனால் பொதுவாக மன அழுத்தம், தூக்கம் கெடுவது, சரியான நேரத்தில் சரியான உணவுகளை தவிர்ப்பது, மனக் கவலைகள், குழப்பங்கள், கண் பார்வை பிரச்சினை என்று பல்வேறு காரணங்களால் மனிதனுக்கு தலைவலி ஏற்...