இந்தியா, ஏப்ரல் 3 -- HT TAMIL EXCLUSIVE: 'குடைக்குள் மழை', ' இங்கிலீஷ் காரன்' 'யோகி' 'அறைஎண் 305 -ல் கடவுள்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மதுமிதா. கணவரை சிவபாலாஜி காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர், சினிமாவில் இருந்து ஒதுங்கினார். இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அவரை அண்மையில் நடந்து முடிந்த ரெட் லாரி திரைப்பட விழாவில் சந்தித்து பேசும் வாய்ப்புக் கிடைத்தது.

ஒரு நடிகர் எப்போதுமே ஒரு நடிகர்தான். ஒருவர் நடிகராக இருக்கும்போது எப்போதுமே அந்த நடிகருக்கு, தான் ஒரு நடிகர் அப்படிங்கிற எண்ணம் இருந்துக்கிட்டே இருக்கும்.

இப்ப இருக்கிற மாடல் உலகத்துல ஒரு கேரக்டர் நம்மை தேடி வருது அப்படின்னா, அந்த கேரக்டர நாம நல்லா செய்வோம் அப்படிங்கற நம்பிக்கையில அத நமக்கு கொடுக்குறாங்க. அப்படி இருக்கும் போது, நமக்குள்ள இருக்கிற நாம ...