இந்தியா, ஜனவரி 29 -- HT Tamil Book SPL: மகாகவி பாரதியாரின் கடிதங்கள் அடங்கிய தொகுப்பு நூல் தான் 'பாரதியின் கடிதங்கள்'. இந்நூலை பாரதி அறிஞர் ரா.அ.பத்மநாபன் தொகுத்தளித்துள்ளார். காலச்சுவடு பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. கல்வி கற்பதற்கு எட்டயபுரம் அரண்மனையின் பொருளுதவி வேண்டி பதினைந்து சிறுவனாக எழுதிய கவிதைக் கடிதம் முதல் இறப்பதற்கு முன்பு குத்தி கேசவ பிள்ளைக்கு எழுதிய கடிதம் வரை பாரதி எழுதிய இருபத்து மூன்று கடிதங்களின் அரிய தொகுப்பு இந்நூல். திலகர், மு.இராகவையங்கார், பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மக்டோனால்டு, பரலி சு. நெல்லையப்பர் முதலானவர்களுக்கு எழுதிய இக்கடிதங்கள் நுட்பமான வாசிப்புக்கு உரியவை.

பாரதி புதையல் திரட்டுகள், சித்திரபாரதி ஆகிய அருங்கொடைகளை வழங்கிய ரா.அ.பத்மநாபன் அவர்களின் பெருமுயற்சியில் உருவான நூல் இது என்பது இந்நூலை வா...